
தமிழக அரசுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாகச் செயல்பட எல்காட் நிறுவனம், ஐ.ஐ.டி. மெட்ராஸ் பிரவர்த்தக் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அரசு செயலிகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு உகந்ததாக மாற்றுவது மற்றும் இந்த புதிய மையத்திற்கு இடமாற்றம் செய்வது இந்தத் திட்டத்தின் முக்கிய பணிகளாகும்.
செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் ரா.குமார் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.