/polimer-news/media/media_files/2026/10/21/vlcsnap-2026-10-21-18h54m53s068-2026-10-21-18-55-29.png)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலங்களின் சர்வீஸ் சாலை மழையால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது.
சாலைப் பள்ளங்களில் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாவதில் ஒரு பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.
தொடர்ந்து விபத்துகள் நடப்பது குறித்து அறிந்த ஓமலூர் டிஎஸ்பி செங்கோட்டுவேலவன் மற்றும் ஆய்வாளர் ஷண்முகம் ஆகியோர் ஆய்வு செய்து சாலைகளை உடனடியாக சீரமைக்க ஒப்பந்தாரரிடம் அறிவுறுத்தினர்.