
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை வர்த்தகத்தில் 547.79 புள்ளிகள் உயர்ந்து 79,857.80 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.20 புள்ளிகள் உயர்ந்து 24,647.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தகவல் தொழில்நுட்பப் பங்குகள் உயர்ந்ததாலும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியாலும் பங்குச்சந்தை குறியீடுகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.