
அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவின் பேர்பீல்டு நகரில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலோவீன் திருவிழா பொருட்கள் விற்கும் கடையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 31 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், ஒரு சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.