
ஸ்பேம் மற்றும் போலி அழைப்புகளைத் தடுக்கும் வகையில் நவம்பர் 1 முதல் தொலைபேசி அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் தெரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
சிம் கார்டு வாங்கும்போது வழங்கப்பட்ட கேஒய்சி ஆவணங்களின் அடிப்படையிலான அதிகாரப்பூர்வ பெயரே அழைப்பை பெறுபவர்களின் திரையில் காட்டப்படும்.