/nakkheeran/media/media_files/2026/10/15/118-2026-10-15-18-26-58.jpg)
நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உலகம் முழுவதும் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் நடித்த 3 வெவ்வேறு தோற்றங்களும், டிரெய்லரில் இடம்பெற்ற காட்சியும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
மோகன்லால் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரின் பங்களிப்பு இவ்வளவு தூரம் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் அறிவித்துள்ளார்.
இந்த நீக்கத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள அவர், தனக்கு நட்சத்திர அந்தஸ்தோ அல்லது சாதனை இலக்குகளோ முக்கியமல்ல என்றும் ரசிகர்களுக்காகவும் மோகன்லாலுக்காகவுமே நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.