
சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் கிரீசின் மரியா சக்காரி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
மிர்ரா ஆண்ட்ரீவா பெலாரசின் சாஸ்னோவிச்சை 6-2, 6-2 என்ற செட் கணக்கிலும், மரியா சக்காரி ஜப்பானின் நாவ் ஹிபினோவை 7-5, 6-1 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தினர்.
இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் மரியா சக்காரி ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனுடனும், மிர்ரா ஆண்ட்ரீவா கனடாவின் லேலா பெர்னாண்டசுடனும் மோதுகின்றனர்.