
மத்திய கிழக்கு கடல் பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்காவின் USS George Washington விமானம் தாங்கிக் கப்பல் மீது ஈரான் நேரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமெரிக்க கப்பலின் மேல் வெடித்ததாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் செப்டம்பர் 23 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரானின் இந்தக் கூற்றுகளை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.