தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.