
ஏமனின் ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான அமெரிக்க தயாரிப்பு M1A2S அப்ராம்ஸ் பீரங்கியை ட்ரோன் மூலம் தாக்கி அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மாரிப் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில், ‘ராஜம்’ குவாட்காப்டர் வெடிகுண்டு வீசப்பட்டதால் பீரங்கி தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
நவீன போர்முறையில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கவச வாகனங்களை மலிவான ட்ரோன்கள் மூலம் அழிக்கும் போக்கு அதிகரித்துள்ளதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.