
தேர்தல் வெற்றிகள் நிரந்தரமல்ல என்றும், கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் இமாலய வெற்றியைப் பெற்றும் பின்னாளில் தோல்வியைச் சந்தித்துள்ளன என்றும் முத்தரசன் கூறினார்.
1991-ல் 234 தொகுதிகளில் 230 இடங்களை வென்ற அதிமுக, 1996 தேர்தலில் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய தேர்தலில் த.வெ.க. பெற்ற வெற்றியை மதிப்பதாகக் கூறிய அவர், ஜனநாயகத்தில் மக்கள் விருப்பமே இறுதியானது எனத் தெரிவித்தார்.