
இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் உலை மேம்பாடுகள் குறித்த 'இந்தியாஸ் நியூக்ளியர் வெப்பன்ஸ்-2026' ஆய்வு அறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வசம் இருந்த 160 அணு ஆயுதங்களுடன் மேலும் 30 ஏவுகணை ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
கல்பாக்கத்தில் அதிவேக பெருக்கு அணு உலை செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.