
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்க அணி வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பலம் வாய்ந்த அணிகளைத் தவிர்த்துவிட்டு, தென் ஆப்பிரிக்காவின் சொந்த நாட்டு ஆடுகளச் சூழலும் ரசிகர்களின் ஆதரவும் மிகப்பெரிய பலமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தகுதிச்சுற்று மூலமாக உலகக்கோப்பைக்கு உள்ளே நுழைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி மற்ற அணிகளுக்கு கடும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.