
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு, முன்ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் கைது நடவடிக்கையில் இறங்கி அலைக்கழிப்பதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.