
தமிழகத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், செயற்கை நுண்ணறிவு மூலம் அச்சிடப்பட்ட தரம் குறைந்த புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வரலாற்று அறிஞர்கள் அல்லது நல்ல பதிப்பகங்களை அணுகாமல், பெயரளவிலான பதிப்பகங்களிடம் இருந்து மிகக்குறைந்த விலையுள்ள புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்வி சார்ந்த இந்த விவகாரத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஆவணங்களுடன் கூடிய வெளிப்படையான பதிலை வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பக மேலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.