
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்மோகன் வந்தபோது, ரம்யா கிருஷ்ணன் இருக்கையில் அமர்ந்தபடி வணக்கம் செலுத்தி கால் மேல் கால் போட்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சரை அவமதித்ததாக ஒரு தரப்பினர் விமர்சிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் இது அவரது 'நீலாம்பரி' கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரம்யா கிருஷ்ணன் அமைச்சருக்கு அமர்ந்தபடியே வணக்கம் தெரிவித்துவிட்டு அருகில் இருந்த நடிகையுடன் பேசத் தொடங்கியதே இந்த சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.