தாராபுரத்தில் முதல்வர் விஜய் நேற்று மேற்கொண்ட பிரசாரத்தால் நகரின் பல சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
முதல்வர் வருகையை ஒட்டி அமைக்கப்பட்ட பேரிகார்டுகளால் மக்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
நகரின் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.