
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் இல்லாதது உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
வேளாண் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.15,167.62 கோடியை விட, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ.470.92 கோடி குறைக்கப்பட்டு ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் மூட்டைகளை பாதுகாக்க 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு போதுமானதல்ல என அவர் விமர்சித்துள்ளார்.