
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் 'அலே போலெலோ' சிங்கிள் ப்ரமோ வீடியோவில் உள்ள மலையாள உச்சரிப்பு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
32 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் அனிருத் இசையமைத்து பாடியுள்ள நிலையில், பாடல் வரிகளின் உச்சரிப்பு சரியாக இல்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இப்படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மற்றும் மோகன்லால், சிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.