
டெல்லி உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் அசாம் கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவு கழகத்திடம் பெற்ற 31,000 டன் மானிய விலை அரிசியை கள்ளச்சந்தையில் விற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஊழல் மூலம் வாரத்திற்கு ₹70 கோடி கமிஷன் ஈட்டப்பட்டு, 3 ஆண்டுகளில் மொத்தம் ₹22,000 கோடி லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டதாக ஆம் ஆத்மி மாநில தலைவர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்குச் சென்றடைய வேண்டிய இந்த அரிசி, அரியானாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு விற்கப்பட்டதாக அவர் வீடியோ மூலம் புகார் அளித்துள்ளார்.