
ஜப்பானின் ஹிரோசாகி கோட்டையை 1,800 தன்னார்வலர்கள் கயிறு கட்டி, பாரம்பரிய 'ஹிக்கியா' முறையில் 2.22 மீட்டர் தூரம் நகர்த்தியுள்ளனர்.
2011 நிலநடுக்கத்தால் சேதமடைந்த கோட்டையின் கல் சுவர்களைச் சீரமைக்க, 2015-ல் 78 மீட்டர் நகர்த்தப்பட்ட கோட்டை தற்போது பழைய இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ஆகஸ்ட் இறுதிக்குள் 4,100 பேர் பங்கேற்புடன் 5 மீட்டர் நகர்த்தப்பட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் கோட்டை அதன் பழைய இடத்தில் நிலைநிறுத்தப்படும்.