
மலேசியாவின் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோக் அப்தா அலிப், தனது 72 வயதில் 20 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 27 அன்று கோலா திரெங்கானுவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் புகைப்படங்களை அவரது தம்பி யூனுஸ் அலிப் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு மலேசிய அணி தகுதி பெற அப்தா அலிப் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.