
எலும்புகளை படிப்படியாக பலவீனமாக்கி எளிதில் உடையும் நிலைக்கு கொண்டு செல்லும் ஆஸ்டியோபொராசிஸ் ஆரம்ப கட்டத்தில் வலியோ அறிகுறியோ தெரியாது.
முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் பாலாடை கட்டி, பால், கீரை உள்ளிட்ட சத்தான உணவுகளை உட்கொள்வதோடு இளம் வெயிலில் இருக்க வேண்டும்.