
94 வயதான மூத்த நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
1931-ம் ஆண்டு பிறந்த இவர், 1950 முதல் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறை பங்களிப்பிற்காக 2022-ம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர், கடைசியாக சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார்.