சி.டி.ஆர்.-ஜேகே டயர் எப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026, கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடரின் முதல் இரண்டு சுற்றுகள் கோவையிலும், மூன்றாவது சுற்று பெங்களூருவிலும், இறுதிச்சுற்று டிசம்பர் 11 முதல் 13 வரை சென்னையிலும் நடைபெறுகிறது.
நரேன் கார்த்திகேயன் போன்ற முன்னணி வீரர்களை உருவாக்கிய இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.