
அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அந்நாட்டின் 6 முன்னணி நிறுவனங்களை சீனா கறுப்புப் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
சீனா தனது ட்ரோன் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளதோடு, தடை செய்யப்பட்ட நிறுவனங்களுடன் பரிவர்த்தனை செய்ய தனிநபர்களுக்கும் தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி அமெரிக்கா சீன ரோபோக்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியான மோதல் அதிகரித்துள்ளது.