
2027 ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்காளர்கள் உரிய படிவங்களை நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம் மற்றும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
2027-ம் ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.