
ராமாயணம் படத்திற்கான ரூ.4000 கோடி பட்ஜெட் என்பது இரண்டு பாகங்கள், உலகளாவிய வெளியீடு மற்றும் மார்க்கெட்டிங் செலவுகளை உள்ளடக்கியது என நடிகர் யாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் இராவணனாகவும் நடிக்கின்றனர்.
சர்வதேச தரத்திலான விஎஃப்எக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துடன் உலக ரசிகர்களை சென்றடையும் வகையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது.