
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலம் தனியாருக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடியில் 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலமும் அடங்கும் என்றும், சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முறைகேடாகப் பணியமர்த்தப்பட்டு பத்திரப்பதிவு நடந்ததாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் அரசியல் உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.