
கினியா நாட்டின் தலைநகர் கொனகெரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட குப்பை மேடு சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
டார் எஸ் சலாம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், குப்பை மேட்டின் அருகே இருந்த குடிசைகள் புதைந்ததில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.