தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையவுள்ள புதிய கூட்டணிக்கு பெயர் சூட்டுவது மற்றும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க நாளை முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பங்கேற்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கூட்டணியின் பெயர் மாநில அளவிலானதா அல்லது தேசிய அரசியலை பிரதிபலிக்கும் வகையிலானதா என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.