
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, டெல்லியில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிய முன்னாள் முதல்வர் ஆதிஷி, சஞ்சய் சிங் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் மற்ற ஆணையர்களின் கருத்துகளை அவர் புறக்கணிப்பதாகக் கூறி, அவர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிபிஎம் அறிவித்துள்ளது.