
வேர்ல்பூல் நிறுவனம் 60 டிகிரி செல்சியஸ் வரை தண்ணீரைச் சூடாக்கி துணிகளைத் துவைக்கும் ஸ்டீம் டெக்னாலஜி வசதி கொண்ட புதிய வாஷிங் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இயந்திரம் 100 வகையான கடினமான கறைகளை 99% நீக்கும் திறன் கொண்டது என்றும், இன்வெர்டர் மோட்டார் மூலம் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
9 கிலோ மற்றும் 7 கிலோ என இரு எடைகளில் கிடைக்கும் இந்த வாஷிங் மெஷினின் விலை 26,790 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.