
ஹங்கேரியில் நடைபெற்ற புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
வேலவன் 11-4, 11-2, 11-3 என்ற புள்ளிக்கணக்கில் ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸை வீழ்த்தி, பி.எஸ்.ஏ. டூர் அரங்கில் தனது 11-வது பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதுவரை பர்காஸுடன் மோதிய 3 போட்டிகளில் வேலவன் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த வெற்றி அவருக்கு இந்தத் தொடரில் முதல் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.