
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஷாக்யா வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாகக் கூறி, அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட மூவரும் முறையே ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆணையிட்டுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி சிபிஐ விசாரணை மற்றும் தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரியுள்ளார்.