/nakkheeran/media/media_files/2026/11/02/r-2026-11-02-12-06-02.jpg)
சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான ஸு செங்ஹாங் என்ற இளைஞர், தனது திருமணத்திற்கு வர உறவினர்கள் யாருமில்லை எனச் சமூக வலைத்தளத்தில் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று அக்டோபர் இறுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் நேரில் வந்து உணவு மற்றும் பல்வேறு சீர்வரிசைகளைக் கொண்டு வந்து குவித்தனர்.
இந்தக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.