
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, சர்ச்சைக்குரிய தலைப்புகளை மாற்ற தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்த முழு அதிகாரம் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சினிமாடோகிராஃப் சட்டம் 1952 மற்றும் புதிய விதிகள் 2024-ன் கீழ், விளம்பரங்கள் மற்றும் டிரெய்லர்களில் உள்ள தலைப்புகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
ரிலீஸ் தேதியை காரணம் காட்டி தணிக்கை நடைமுறைகளை விரைவுபடுத்த முடியாது என்பதால், தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என வாரியம் அறிவுறுத்தியுள்ளது.