
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை முன்னிட்டு கோவளம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.