
சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பு மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்களால், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் இந்தியா 77 டன் தங்கத்தை வாங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு முதலீடாக தங்கம் மீது முதலீட்டாளர்களின் கவனம் தொடர்ந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபரின் கொள்கைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.