
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரத்தைத் தொடர்ந்து, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ரூ. 1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 135 விலை குறைந்துள்ளது.