
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில், ஆர்த்தி மாதம் ரூ. 40 லட்சம் கேட்ட ஜீவனாம்ச கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விவாகரத்து வழக்கு முடியும் வரை ஆர்த்திக்கு மாதம் ரூ. 3 லட்சம் மட்டும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரவி மோகன் தனது மகன்களான ஆரவ் மற்றும் அயானை சந்திக்க எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.