உலகளவில் பிறக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட ஒரு லட்சம் பிள்ளைகளில் 70 பிள்ளைகளுக்கு இண்டஸ்ஸசெப்ஷன் எனப்படும் குடல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கின்றனர்.
குடலின் ஒரு பகுதி மடிப்பு பகுதியில் அடுத்த குடலுக்கு நழுவி செல்வதால் உணவு செல்வது தடைபட்டு, வயிறு வீக்கம், வாந்தி, குருதி கலந்த மலம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இது அவசர மருத்துவ நிலையாகும் என்பதால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை அல்லது பிரத்யேக மருந்து மூலம் சிகிச்சை பெற வேண்டும்.