
ராமநாதபுரம் அருகே ஆன்லைன் மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை கமிஷன் அடிப்படையில் வழங்கி உதவிய சாத்தான்குளத்தைச் சேர்ந்த தனசேகரன் (25) கைது செய்யப்பட்டார்.
மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி குற்றவாளிகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில், அவர் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் பேரில் கேணிக்கரை போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மோசடி பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.