
எரிபொருள் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் 4 வர்த்தக கப்பல்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கடற்படை தெரிவித்துள்ளது.
குவைத் ஆயில் டேங்கர் நிறுவனத்திற்குச் சொந்தமான 'Al Funtas' கச்சா எண்ணெய் கப்பல் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்தது பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மத்தியில் பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது.