
நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தன்னைத் திருமணம் செய்துகொள்ள ராஷ்மிகா சுமார் 100 தடவையாவது கெஞ்சியிருப்பதாக நகைச்சுவையாகக் கூறினார்.
அவரது இந்தப் பேச்சு ராஷ்மிகாவை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் விவாதங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.