
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
மெத்வதேவ் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இவருடன் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அலெக்ஸ் டி மினார், ரபேல் ஜோடார் மற்றும் கேஸ்பர் ரூட் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.