
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என பெயரிடப்பட உள்ளதாகவும், இது இந்த ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 2ஆவது புயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை ஆந்திராவின் பாபட்லா-காவாலி இடையே ஓங்கால் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.