
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். போட்டியில், மதுரை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த மதுரை அணி 20 ஓவரில் 157/9 ரன்கள் எடுத்த நிலையில், திருப்பூர் அணி 17.4 ஓவரில் 160/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் சேலம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வீழ்த்தியது; நெல்லை அணியின் சந்தோஷ் குமார் மற்றும் அதிஷ் தலா 50 ரன்கள் எடுத்தனர்.