/polimer-news/media/media_files/2026/10/31/vlcsnap-2026-10-31-10h31m05s968-2026-10-31-10-31-22.png)
தனியார் பள்ளிகளின் அங்கீகார விதிகளை மாற்ற லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை நவம்பர் 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வழங்குவதாக நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.
சிறையில் தனக்கு உரிய உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கப்படவில்லை என்று அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டதை அடுத்து, அவருக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க நீதிபதி அனுமதி அளித்தார்.