
ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் 1.42 நிமிட டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராகவ் ஜுயல், மோகன் பாபு, காயடு லோஹர் மற்றும் சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.